Dec 20, 2025
Thisaigal NewsYouTube
சீ விளையாட்டுப் போட்டி: பதக்க இலக்கைக் கடந்தது மலேசியா
விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டி: பதக்க இலக்கைக் கடந்தது மலேசியா

Share:

பேங்காக், டிசம்பர்.20-

2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா பதக்க இலக்கைக் கடந்தது. மலேசியா 200 பதக்க இலக்கை நிர்ணயித்திருந்தது. எனினும் அதை விடக் கூடுதலாக மொத்தம் 231 பதக்கங்களை வென்று அது சாதனை படைத்தது.

மலேசியா 57 தங்கம், 57 வெள்ளி, 117 வெண்கலப் பதக்கங்களை வாகை சூடியது. தேசிய வுஷூ வீராங்கனை டான் சியோங் மின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார். தேசிய நீச்சல் வீரர் ஹியூ ஹோ ஏன் சிறந்த வீரராகத் தேர்வு பெற்றார். அனுபவமிக்க விளையாட்டாளர்களைத் தவிர்த்து இம்முறை 646 புதிய முகங்கள் களமிறங்கினர். அவர்களில் 34 விழுக்காட்டினர் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

2027 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தவிருக்கிறது. இந்நிலையில் பதக்கம் இலக்கை மலேசியா தாண்டியிருப்பது ஊக்கமளிப்பதாக இருப்பதாக தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குனர் ஜெஃப்ரி ஙாடிரின் தெரிவித்தார்.

Related News