வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அந்த அணியில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷஹாதத் ஹொசைன் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 66.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் மற்றும் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.