டக்கா, ஆகஸ்ட்.03-
வங்காளதேசத்தில் நடைபெற்ற பிஎஸ்ஏ செட்டலிட் 6வது பன்னாட்டு பொது ஸ்குவாஷ் 2025 போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் வினிகாஷினி குலசேகரனும் வித்ரிகாஷினி குலசேகரனும் உலக அரங்கில் முத்திரை பதித்துள்ளனர். இதில் வினிகாஷினி சாம்பியன் பட்டத்தையும், வித்ரிகாஷினி ரன்னர் ஆப் பட்டத்தையும் வென்று நாட்டைப் பெருமைப்படுத்தினர்.
இளம் வயதிலிருந்தே ஸ்குவாஷில் ஜொலித்து வரும் இந்தச் சகோதரிகள், படிப்பில் கவனம் செலுத்த ஸ்குவாஷுக்கு சற்று ஓய்வளித்திருந்தாலும், விளையாட்டு கற்றுக் கொடுத்த விடாமுயற்சியுடனும் உத்வேகத்துடனும் இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.