வாஷிங்டன், டிசம்பர்.06-
2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. அவ்வாட்டம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 11 ஆம் நடைபெறவிருக்கிறது.
2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவ்விரு நாடுகளும் களமிறங்கின. 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விரு நாடுகளும் மீண்டும் மோதவிருக்கின்றன.
இவ்வேளையில், நடப்பு வெற்றியாளரான அர்ஜெண்டினா, அல்ஜீரியாவைச் சந்திக்கிறது. பிரான்ஸ், செனகலுடன் மோதுகிறது. இங்கிலாந்து, குரோஷியாவுடன் பலப்பரீட்சையில் இறங்குகிறது.
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்தாண்டு ஜுன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் 78 ஆட்டங்களும் மெக்சிகோ மற்றும் 13 ஆட்டங்களும் நடைபெறும்.








