Oct 19, 2025
Thisaigal NewsYouTube
சிறப்புக் காலணிகளை ஏலம் விடுகிறார் சாஃபி சாலே
விளையாட்டு

சிறப்புக் காலணிகளை ஏலம் விடுகிறார் சாஃபி சாலே

Share:

கோலாலம்பூர், மார்ச்.17-

2010 ஆம் ஆண்டு ஹரிமாவ் மலாயா AFF கிண்ண வெற்றியாளராக உதவிய போது தாம் பயன்படுத்திய சிறப்புக் காலணிகளை தேசிய முன்னாள் கால்பந்து வீரரான சாஃபி சாலே ஏலம் விடுகிறார். 1996 இல் தென்கிழக்கு ஆசியாவின் அந்த பிரசித்தி பெற்ற போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தேசிய அணி ஒரு ஒரு முறை AFF கிண்ணத்தை 2010 ஆம் ஆண்டு வென்றது.


இறுதியாட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி இந்தோனேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றியாளரானது. அவ்வாட்டத்தில் முக்கியத் தூணாக விளங்கிய சாஃபி, இறுதி ஆட்டத்தில் மூன்று கோல்களை அடித்தார்.

“இறுதிப் போட்டியின் போது நான் அணிந்திருந்த சிறப்பு காலணிகளை வெளியிடுவதற்கான நேரம் இது! இது போராட்டம், எழுச்சி பெறுதல் மற்றும் வெற்றியின் சின்னமாகும்” என அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், ஜோகூர் தாருல் தாஜிம் (JDT) அணியின் முன்னாள் வீரருமான சாஃபி, 2015 AFC கிண்ண இறுதிப் போட்டியின் போது பயன்படுத்திய ஹரிமாவ் செலாத்தான் அணி ஜெர்சியையும் ஏலம் விடுகிறார்.


Related News