கோலாலம்பூர், நவம்பர்.26-
விளையாட்டுத்துறை ஊடகவிலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
செய்தித் துறை தொடர்பாக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டாலும் பின்னணியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
நேற்று அந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டது தொடர்பில் போலீசார் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். இவ்விவகாரம் இன்னமும் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஆருடங்கள் வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.








