புக்கிட் ஜாலில், ஜூலை.28-
மலேசியக் கால்பந்து அணி ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிக்குத் தகுதி பெறுவதை மட்டுமே இலக்காக வைக்கவில்லை. மாறாக குழு அளவில் வெற்றி பெறவும் உறுதி பூண்டுள்ளதாக அதன் தேசியத் தலைமைப் பயிற்றுனர் பீட்டர் கிளமோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டியின் தனது இடத்தை உறுதிச் செய்வது மட்டுமல்ல, ஆசிய அரங்கில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சிகளை ஏற்படுத்துவதே குறிக்கோள் என அவர் குறிப்பிட்டார். தர வரிசை அல்லது முடிவுகளை மட்டும் அடிப்படையாக வைத்து வெற்றியை அளவிடக் கூடாது. நிலையான, தரமான விளையாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் தேசிய அணி அளவிடப்பட வேண்டும் என கிளமோவ்ஸ்கி மேலும் கூறினார்.