பாரிஸ், ஆகஸ்ட்.28-
2025 உலகப் பூப்பந்து போட்டியில் நாட்டின் மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி டான்-எம். தீனா மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் சுற்றில் அவர்கள் ஹாங் காங் இணையைச் சந்தித்தனர்.
அவ்விணையை அவர்கள் நேரடி செட்களில் மிக எளிதாகத் தோற்கடித்தனர். அவர்கள் வெற்றி பெறத் தேவைப்பட்டது வெறும் 37 நிமிடங்கள் மட்டுமே.
இவ்வேளையில் மூன்றாம் சுற்றில் பெர்லி-தீனா இந்தோனேசிய ஜோடியான த்ரியா மாயாசாரி-சித்தி ஃபாடியா சில்வா ராமதாந்தியுடன் களம் இறங்குகின்றனர்.