கோலாலம்பூர், அக்டோபர்.12-
மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பெர்லி டான்-எம்.தீனா, ஃபின்லாந்தில் நடந்த 2025 ஆர்திக் பொதுப் பூப்பந்து போட்டியில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
உலகின் இரண்டாம் நிலை ஜோடியான இவர்கள், இறுதிப் போட்டியில் ஜப்பானின் Rin Iwanaga-Kie Nakanishi ஜோடியை வெறும் 32 நிமிடங்களில் 21க்கு 7, 21 க்கு 9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினர்.
இந்தப் பிரம்மாண்ட வெற்றியானது, தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டிக்குப் பிறகு இந்த ஆண்டு இவர்கள் வெல்லும் இரண்டாவது பட்டமாகும். மேலும் இவர்களின் உலகத் தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.