தோக்யோ, ஜூலை.20-
ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் நாட்டின் மகளிர் இரட்டையர்களான பெர்லி டான்-எம்.தீனா தோல்வி கண்டனர். அவ்விருவரும் உலகின் முதல் நிலை இரட்டையரான சீனாவின் லியு ஷெங் ஷு- டான் நிங்கிடம் நேரடி செட்களில் வீழ்ந்தனர். அதனை அடுத்து இறுதியாட்டத்தில் சாதனை படைக்கும் அவர்களது கனவு நனவாகவில்லை.
இதற்கு முன் இரு தரப்பினரும் நான்கு முறை சந்தித்துள்ளனர். அவை நான்கிலுமே தோல்வியுற்ற பெர்லி டான்-எம். தீனாவுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் 2008 ஆம் ஆண்டு ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் களமிறங்கிய நாட்டின் புகழ் பெற்ற இரட்டையரான சின் ஏய் ஹூய்-வோங் பெய் தியின் சாதனையை பெர்லி டான்-எம்.தீனா ஈடு செய்துள்ளனர்.