லண்டன், ஜூலை.29-
புதிய பருவத்திற்கு சிறந்த ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்ய முன்னணி கால்பந்து அணியான லிவர்பூல் தொடர்ந்து பெரும் தொகையைச் செலவிட்டு வருகிறது. அவ்வகையில், சுவீடன் வீரர் அலெக்ஸண்டர் ஐசெக்கை வாங்க லிவர்பூல், நியூகாசல் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன் லுயிஸ் டியாஸை பாயர்ன் முனிம் அணியிடம் விற்ற லிவர்பூல், அத்தொகையைப் பயன்படுத்தி ஐசெக்கை வாங்கத் திட்டமிட்டுள்ளதாம். நியூகாசலிடம் சம்பளத்தை உயர்த்திக் கேட்டதால், அவ்வணியில் ஐசெக்கின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.
இதனிடையே டியாஸின் இடத்தை நிரப்ப, ஐசெக் பொருத்தமானவராக இருப்பார் என லிவர்பூல் நம்புகிறது. அவரை நியூகாசல் விட்டுக் கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தில் இணைய அவர் லிவர்பூலுடன் இணக்கம் கண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.