Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வோம் !
விளையாட்டு

ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வோம் !

Share:

பாரிசில் நக்க இருக்கும் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 206 நாட்கள் எஞ்சி இருக்கின்ற வேளையில், மலேசியா நிச்சயமாக தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளார் இளைஞர் , விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ.

ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை தேசிய சைக்கிளோட்ட வீரர் டத்தோ அஸிஸுல்ஹஸ்னி அவாங் பெற்றுத் தருவார் எனவும் மலேசியாவின் தங்கப்பதக்கக் கனவை நிஜமாக்க அவர் மெல்பர்னில் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பி இருப்பதாகவும் தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், 2024 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மலேசிய மக்கள் மாற வேண்டும் எனவும் தங்களின் வாழ்வில் ஒரு விளையாட்டையாவது மக்கள் தேர்ந்தெடுத்து அதில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்,

ஒரு வேளை, அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும், மக்கள் தங்களின் உணவில் சர்க்கரையைக் குறைத்துக் கொள்ளுமாற்ய்ம் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News