10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த கபடி திருவிழா நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்லா அணிகளுக்கும் உரித்தான நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
ஆமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் ஏற்கனவே நடந்த சுற்று முடிவில் புனேரி பால்டன் (5 வெற்றி, ஒரு தோல்வி) 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.