கோல்கத்தா, டிசம்பர்.13-
கோட் இந்தியா’ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கோல்கத்தாவில் தமது 70 அடி உயரச் சிலையைத் திறந்து வைத்தார்.
அவர் இன்று அதிகாலை 2.26 மணிக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் கோல்கத்தாவிலுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் வந்திறங்கினார். சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் அவருடன் வந்தனர்.
அந்த அதிகாலைப் பொழுதிலும் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்து ‘மெஸ்ஸி, மெஸ்ஸி’ என்று முழங்கினர். பின்னர், நேராக ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு மெஸ்ஸி புறப்பட்டுச் சென்றார். ஹோட்டலுக்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியைக் காண திரண்டிருந்தனர்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் அவர்களை மெஸ்ஸி சந்திக்கவில்லை. விமான நிலையத்திலும் ஹோட்டலைச் சுற்றிலும் காவல்துறையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.








