Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இது சிஎஸ்கேவிற்கு சோதனை காலம்
விளையாட்டு

இது சிஎஸ்கேவிற்கு சோதனை காலம்

Share:

இந்தியா, மே 11-

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில் பதிரனா, தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறாத நிலையில், ரஹானேவும் ஃபார்மில் இல்லாமல் திணறி வருகிறார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவித்துள்ளது.

சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து சாதனை மேல் சாதனை படைத்தனர். இந்த சீசனில் 2ஆவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதல் பவர்பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசத்ம் அடித்தார். இதே போன்று சுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் 10 ஓவர்களில் குஜராத் 107 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்த ஜோடி இணைந்து 148 ரன்கள் எடுத்திருந்த போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எடுத்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்த ஜோடி கடந்த ஆண்டு 147 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவர்களில் குஜராத் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுப்மன் கில் 49 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4ஆவது சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதே போன்று சுப்மன் கில்லும் 55 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 104 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேவிட் மில்லர் 16 ரன்னும், ஷாருக் கான் 2 ரன்னும் எடுக்கவே குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது.

இது போன்று பல காரணங்களால் பந்து வீசுவதற்கும், விக்கெட் எடுப்பதற்கும் பவுலர்கள் இல்லாமல் தவித்த சிஎஸ்கே அணியில் டேரில் மிட்செல் மற்றும் சிமர்ஜீத் சிங் இருவரும் தலா 4 ஓவர்கள் வீசி 52 ரன்கள், 60 ரன்கள் கொடுத்துள்ளார். துஷார் தேஷ்பாண்டே மட்டும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்து வீசினார்.

Related News