Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷா கிண்ணம்: ஜேடிதி மகுடம் வென்றது
விளையாட்டு

சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷா கிண்ணம்: ஜேடிதி மகுடம் வென்றது

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஆகஸ்ட்.09-

ஜோகூரின் ஜேடிதி அணி சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷா கிண்ணத்தை வாகை சூடியிருக்கிறது. அது அக்கிண்ணத்தைத் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்கண்டார் புத்ரி சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி சிலாங்கூர் எஃப்சியை 3க்கு சுழியம் என்ற கோல்களில் வீழ்த்தி அக்கிண்ணத்தைத் தன்வசம் ஆக்கியது. அவ்வாட்டத்தை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களித்தனர்.

ஜேடிதிக்கான கோல்களை ஜைரா லா சிலா, எடி இஸ்ராஃபிலோ, அரிஃப் ஐமான் ஆகியோர் அடித்தனர். இதனிடையே தமதணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஜேடிதி தலைமை பயிற்றுனர் ஜிஸ்கோ முனோஸ் பெருமிதம் தெரிவித்தார்.

Related News