Oct 19, 2025
Thisaigal NewsYouTube
நான் இல்லேன்னாலும் இந்திய அணி நல்லாதான் விளையாடுது… சஞ்சு சாம்சன் பதில்!
விளையாட்டு

நான் இல்லேன்னாலும் இந்திய அணி நல்லாதான் விளையாடுது… சஞ்சு சாம்சன் பதில்!

Share:

ஆகஸ்ட் 12-

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் உலகக் கோப்பை முடிந்ததும் நடக்கும் இலங்கை அணிக்கெதிரான டி 20 தொடரில் அவர் பெயர் இடம்பெற்றது. ஆனால் அந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்ட இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆனார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனஙள் எழுந்தன. அதனால் இனிமேல் அவருக்கு அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சஞ்சு சாம்சன் “என்னை அழைத்தால் நான் இந்திய அணிக்காக விளையாடுவேன். இல்லையென்றாலும் பரவாயில்லை. இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. நான் எப்போதும் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். கடுமையாக பயிற்சியை மேற்கொள்வேன். இது என் ஆட்டத்தை மேம்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.

Related News