பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற நிலை இருக்கிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
2-வது டெஸ்ட் கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. 3-வது டெஸ்ட் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.