Oct 18, 2025
Thisaigal NewsYouTube
2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்படும்: ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு அறிவித்தார்
விளையாட்டு

2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்படும்: ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு அறிவித்தார்

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.08-

2026 ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவில் இந்தியர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தைச் சேர்த்துக் கொள்வதற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு அறிவித்தார்.

2026 சுக்மா விளையாட்டுப் போட்டியின் உபசரணை மாநிலம் என்ற முறையில் சிலம்பத்தைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று அறிவிக்கப்பட்ட முடிவை எதிர்த்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் தாமும், இளைஞர் விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹால்மியும் வினவியதைத் தொடர்ந்து சிலம்பம் உட்பட இதர இரண்டு விளையாட்டுப் போட்டிகளை சுக்மாவில் சேர்த்துக் கொள்வதற்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இணக்கம் தெரிவித்து இருப்பதாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.

இவ்விவகாரம் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சுக்குச் கொண்டுச் செல்லப்பட்டு, அமைச்சர் ஹன்னா இயோ தலைமையிலான குழுவினர் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று பாப்பா ராய்டு நம்பிக்கை தெரிவித்தார்.

Related News