கோலாலம்பூர், நவம்பர்.16-
மலேசியாவின் பூப்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களான பெர்லி டான்-எம். தீனா இணையினர், Kumamoto மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில், உபசரணை நாட்டின் நட்சத்திரங்களான ஜப்பானின் Rin Iwanaga-Kie Nakanish இரட்டையரை வெறும் 54 நிமிடங்களில் 22க்கு 20, 21க்கு 19 என்ற நேரடி செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.
முதல் செட்டில் 17 க்கு 20 என்ற பின் தங்கிய ஆபத்தான நிலையிலும் அசாத்தியமான மன உறுதியாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும் இந்த அதிரடியான மீள் எழுச்சியை நிகழ்த்திக் காட்டியதன் மூலம், அவர்கள் மீண்டும் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்த அபார வெற்றியின் மூலம், தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி, ஆர்டிக் பொதுப் பூப்பந்து போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் தங்கள் மூன்றாவது அனைத்துலகப் பட்டத்தை வெற்றி கொண்டு, இந்த மகளிர் இரட்டையர் உலக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.








