ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.
17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்பட்ட
வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இதேபோல டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர்.
குஜராத் டைட்டன்சை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.