பாரிஸ், செப்டம்பர்.01-
2025 உலகப் பூப்பந்து போட்டியின் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் தேசிய வீராங்கனைகள் பெர்லி டான்-எம். தீனா வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். இறுதியாட்டத்தில் அவர்கள் சீன இணையைச் சந்தித்தனர். சீன வீராங்கனைகளுக்குக் கடும் போட்டியைக் கொடுத்த பெர்லி டான்-எம். தீனா மூன்று செட்களில் தோல்வி கண்டனர். இருப்பினும் உலகப் பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டம் வரை சென்றதால், பெர்லி டான்-எம். தீனா வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கலப்பு இரட்டையர் பிரிவில் நாட்டின் சென் தாங் ஜீ-தோ ஈ வெய் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இறுதியாட்டத்தில் அவ்விருவரும் சீன ஜோடியை எதிர்கொண்டனர். வெறும் 39 தே நிமிடங்களில் அவர்கள் வெற்றியைப் பதிவுச் செய்தனர். அவ்வெற்றியின் மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக பட்டத்தை வென்று மலேசியா வரலாறு படைத்தது.