கோலாலம்பூர், அக்டோபர்.29-
நாட்டில் மோட்டார் பந்தயத்துறையை ஊக்குவிக்கும் வகையில் அடுத்தாண்டு சிப்பாங்கில் புதிய தளமொன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சிப்பாங் அனைத்துலகப் பந்தயத்தள மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 20 லட்சம் ரிங்கிட் அதற்காகப் பயன்படுத்தப்படும் என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது.
அத்திட்டம் சுமூகமாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பிற மாநிலங்களிலும் அம்மாதிரியான தளம் ஏற்படுத்தப்படும் என அமைச்சு மேலும் கூறியது.








