Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மொனாக்கோவுக்குத் திரும்ப எண்ணுகிறார் போக்பா
விளையாட்டு

மொனாக்கோவுக்குத் திரும்ப எண்ணுகிறார் போக்பா

Share:

பாரிஸ், ஜூன்.14-

ஊக்கமருந்து தடைக்குப் பிறகு கால்பந்தாட்டத்திற்குத் திரும்பவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ஜுவெண்டஸ் முன்னாள் வீரர் பால் போக்பா மொனாக்கோவுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளாராம்.

பிரான்சுடன் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள 32 வயதான போக்பா, லீக் 1 அணியுடன் தனது தாய்நாட்டிற்குத் திரும்ப எண்ணம் கொண்டுள்ளார்.

மொனாக்கோவுடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவது குறித்து விவாதங்கள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. வரும் நாட்களில் அந்த ஒப்பந்தம் கைகூடலாம்.

2023-24 பருவத்தில் உடினீஸுக்கு எதிரான ஜுவென்டஸின் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டைத் தொடர்ந்து அக்டோபரில் அத்தடை 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.

நவம்பரில் ஜுவென்டஸுடனான தனது ஒப்பந்தத்தை பரஸ்பர முடிவுக்குக் கொண்டு வர அவர் ஒப்புக் கொண்டார். மார்ச் முதல் அவர் கிளப்பின்றி இருக்கிறார்.

Related News