கோலாலம்பூர், நவம்பர்.26-
விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட அந்த இருவர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மூன்று நாள் தடுப்புக் காவலுக்கான அனுமதி பெறப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு நபர்கள் வேலையற்றவர்கள் என்று குறிப்பிட்ட ஹூ சாங் ஹூக், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
SAM- மின் உறுப்பினரான ஹரேஷ் டியோல், நேற்று மாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் தாக்கப்பட்டு சொற்ப காயங்களுக்கு ஆளாகினார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.








