Dec 1, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவை வீழ்த்தியது இந்தியா
விளையாட்டு

மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

Share:

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக போரடின.

இந்தியா தரப்பில் மும்தாஜ் கான் (10வது நிமிடம்), தீபிகா (26வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் பிரிவு ஏ-வில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

Related News