Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த ஏழு கால்பந்தாட்ட வீரர்களுக்கும் குடியுரிமையை அரசாங்கம் அங்கீரித்துள்ளது: அமைச்சர் சைஃபுடின் விளக்கம்
விளையாட்டு

அந்த ஏழு கால்பந்தாட்ட வீரர்களுக்கும் குடியுரிமையை அரசாங்கம் அங்கீரித்துள்ளது: அமைச்சர் சைஃபுடின் விளக்கம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.09-

மலேசிய கால்பந்துச் சங்கத்தை சேர்ந்த 7 வீரர்கள் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு அரசாங்கம், குடியுரிமையை அங்கீரித்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த கால்பந்தாட்ட வீரர்கள் மலேசியாவில் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு “இயற்கை மயமாக்கல்: திட்டத்தின் கீழ் அவர்களுக்கு குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள், மலேசிய குடியுரிமைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 19 ஆவது பிரிவின் கீழ் அவர்களின் குடியுரிமையை அங்கீரிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயா சார்பில் விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு எதிராக அனைத்துலக கால்பந்து சம்மேளமான FIFA (ஃபிஃபா) எடுத்துள்ள நடவடிக்கையைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

Related News