கோலாலம்பூர், அக்டோபர்.13-
சேப்பாக் தக்ராவ் விளையாட்டு, தமிழ், சீனப்பள்ளிகளில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் எல்லைத் தாண்டிய கலாச்சாரத்தை விதைக்கும் முயற்சியாக தமிழ், சீனப்பள்ளிகளில் ஒரு முன்னோடித் திட்டமாக புறப்பாட நடவடிக்கைகளில் சேப்பாக் தக்ராவ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
விளையாட்டின் வாயிலாக ஒற்றுமையுணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில் மலேசிய ஒற்றுமை விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு நிதி அமைச்சு அதிகாரம் வழங்கியதன் அடிப்படையில் சேப்பாக் தக்ராவ் விளையாட்டு, தாய்மொழிப் பள்ளிகளில் பிரவேசிக்கவிருக்கிறது என்று ஹன்னா இயோ தெரிவித்தார்.