கோலாலம்பூர், டிசம்பர்.09-
சீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தேசிய வீரர்கள், போட்டிகளில் கவனம் செலுத்தி, நம்பிக்கையுடன் விளையாட வேண்டுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியர்கள் அனைவரும் நமது தேசிய விளையாட்டாளர்களின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டிகளானது, தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து விளையாட்டு வீரர்களை ஒன்றிணைத்து பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிட வைக்கின்றது.
தாய்லாந்தில் இன்று தொடங்கும், இந்த சீ விளையாட்டுப் போட்டிகளில், 50 பிரிவுகளிலும், மலேசியாவைச் சேர்ந்த 1100 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
முந்தைய தொடர்களில் பெற்ற வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு, மலேசிய வீரர்கள் இந்த முறையும் வலுவான செயல்திறனைக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








