இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பவர் பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் - ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 212 ரன்கள் குவித்தது.
ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.