Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கோலி ரன் குவித்தாலும் விடாமல் தொடரும் நெருக்கடி என்ன? ஆர்.சி.பி. சறுக்கியது எங்கே?
விளையாட்டு

கோலி ரன் குவித்தாலும் விடாமல் தொடரும் நெருக்கடி என்ன? ஆர்.சி.பி. சறுக்கியது எங்கே?

Share:

இந்தியா, மார்ச் 31 -

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 போட்டிகள் நடந்துவிட்டாலும், ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி என்றாலே அது ஐபிஎல் தொடரின் “ எல் ப்ரைமிரோஎன்றுதான் அழைக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கும்போது, முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள்தான் மோதின. அந்த ஆட்டத்தில் மெக்கலம் 73 பந்துகளில் 158 ரன்கள் சேர்க்கவே கேகேஆர் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்தத் தொடரிலிருந்து இந்த 2024 சீசன் வரை ஆர்சிபி-கேகேஆர் போட்டிகள் என்றாலே இரு அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டுதான் களத்தில் மோதியிருந்தன. பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. விராட் கோலி, கவுதம் கம்பீர், கிறிஸ் கெயில் என பல வீரர்கள் களத்தில் உரசி இருக்கிறார்கள். நீயா, நானா என்ற ரீதியில்தான் பந்துவீச்சும், பேட்டிங்கும் இரு அணிகளிடமும் கடந்த காலத்தில் இருந்துள்ளது.

அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் ரசிகர்களின் உற்சாகத்துக்கும், ஆதரவுக்கும் குறைவிருக்காது. இந்த ஆட்டத்திலும் ரசிகர்கள் ஏராளமாக வந்திருந்தாலும் அனைவரையும் வாயடைக்க வைத்தது கொல்கத்தா அணி.

Related News