Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸீ ஜியாவுக்குக் கடும் சவால்
விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸீ ஜியாவுக்குக் கடும் சவால்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.13-

ஆகஸ்ட் 25 முதல் 31 வரை பாரிஸில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வீரர் லீ ஸீ ஜியாவுக்கு கடுமையானச் சவால் காத்திருக்கிறது.

மார்ச் மாதம் அகில இங்கிலாந்துக்குப் பிறகு முதல் முறையாகப் போட்டியில் களமிறங்கும் ஸீ ஜியா, தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜினுக்கு எதிராக தொடக்க ஆட்டத்தை எதிர்கொள்ளப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட குலுக்கலின் அடிப்படையில், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினால், உலகின் 4வது இடத்தில் உள்ள சீனாவின் லி ஷிஃபெங்கை ஸீ ஜியா எதிர்கொள்வார்.

ஸீ ஜியா ஆண்டு முழுவதும் கணுக்கால் காயத்தால் போராடி வருவதாலும், இதுவரை ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் மற்றும் அகில இங்கிலாந்தில் மட்டுமே பங்கேற்றிருப்பதால் அவரது உடற்தகுதி சோதிக்கப்படும்.

27 வயதான அவர் நீண்ட காலமாக போட்டிகளில் பங்கேற்காததால் அண்மைய உலகத் தர வரிசையில் 52வது இடத்திற்குச் சரிந்துள்ளார்.

இதற்கிடையில், உலகின் 25வது இடத்தில் உள்ள லியோங் ஜுன் ஹாவோ, சுவிஸ் வீரர் டோபியாஸ் குயென்சியை எதிர்த்து எளிதாக முதல் ஆட்டத்தை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், கோ ஜின் வெய் சீனாவின் காவ் ஃபாங்ஜியை எதிர்த்து கடினமான முதல் சுற்று ஆட்டத்தை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில் கே. லெட்ஷானா ஹாங்காங்கின் சலோனி மேத்தாவைச் சந்திப்பார்.

Related News