மாட்ரிட், செப்டம்பர்.22-
லா லீகா கால்பந்தாட்டத்தில் பார்சிலோனா அணி வாகை சூடியது. அது கெதாஃபியை 3க்கு 0 என்ற கோல்களில் தோற்கடித்தது.
பார்சிலோனா அணியின் கோல்களை பெரான் தோரஸ், டெனி ஒல்மா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்றிட், 1-1 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியுடன் சமநிலை கண்டது.
எல்ஹி, 1-0 என்ற கோல் கணக்கில் ஓவியாடோவை வீழ்த்தி வெற்றி பெற்றது.








