Oct 17, 2025
Thisaigal NewsYouTube
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ஸ்டீவ் ஸ்மித் கருத்து
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ஸ்டீவ் ஸ்மித் கருத்து

Share:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை புதன்கிழமை தொடங்குகிறது.

தையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஐபிஎல் போன்ற போட்டிகள் உலக அளவில் புகழை எட்டியுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் குறித்து கேள்வி அடிக்கடி எழுகிறது, ஆனால் டெஸ்ட் கிரிகெட்டுக்கு என்றும் அழிவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. இந்திய அணி பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம். முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.


Related News