Nov 6, 2025
Thisaigal NewsYouTube
மேலும் ஒரு கால்பந்தாட்டக்காரரை அம்பலப்படுத்தியது அர்ஜெண்டினா
விளையாட்டு

மேலும் ஒரு கால்பந்தாட்டக்காரரை அம்பலப்படுத்தியது அர்ஜெண்டினா

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

மலேசியாவின் தேசிய கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவில் இடம் பெற்றுள்ள மேலும் ஒரு கலப்பு ஆட்டக்காரரின் குடும்பத்தினர், மலேசியாவுடன் அறவே தொடர்பு இல்லாதவர்கள் என்று அர்ஜெண்டினா செய்தித் தளம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

மலேசிய தேசிய அணியில் இடம் பெற்றுள்ள 7 கலப்பு ஆட்டக்காரர்களின் தாத்தா,பாட்டி மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொய்யான ஆவணங்களை உலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவிடம் வழங்கப்பட்ட மோசடியைத் தொடர்ந்து, அந்த 7 ஆட்டக்கார்களின் பூர்வீகம் மலேசியா அல்ல என்றும், அர்ஜெண்டினா, ஸ்பெயின் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த செய்தி தளம் முதல் முறையாக அம்பலப்படுத்தியது .

ஆகக் கடைசியான அந்த செய்தித்தளம் நேற்று அம்பலப்படுத்திய மற்றொரு விவகாரத்தில் மலேசிய தேசிய அணியின் முன்னணி ஆட்டக்காரரான Javier Machuca, மலேசியாவுடன் தொடர்பு இல்லாதவர் என்று அந்த அகப்பக்கம் குறிப்பிட்டுள்ளது.

Javier Machuca-வின் பாட்டி Concepcion Agueda Alaniz, மலேசியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுவது உண்மையல்ல. தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த ஆட்டக்காரரின் பாட்டி, Concepcion Agueda Alaniz, அர்ஜெண்டினாவில் San Jeroonimo Sir என்ற நகரில் Roldan என்ற ஊரில் பிறந்தவர்.

கடந்த 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஓர் அற்றைக் கூலித் தொழிலாளரான Jorge Luis Saracho என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த அந்த மூதாட்டி எவ்வாறு மலேசியராக இருக்க முடியும் என்று அந்த செய்தித்தளம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related News