சீனா, செப்டம்பர்.21-
நாட்டின் கலப்பு இரட்டையரான சென் தாங் ஜீ-தொ யீ வெய், சீனா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் தோல்வி கண்டனர். இறுதியாட்டத்தில் அவர்கள் தாய்லாந்து ஜோடியிடம் வீழ்ந்தனர். முதல் செட்டில் தோல்வியுற்ற தாங் ஜீ-யீ வெய் இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்று வெற்றி பெறப் போராடினர். எனினும் தாய்லாந்து இணையிடம் ஈடு கொடுக்க முடியாமல் நேரடி செட்களில் மலேசிய இணை வீழ்ந்தது.
மலேசிய ஜோடியும் அந்த தாய்லாந்து இணையும் இதுவரை ஐந்து முறை மோதியுள்ளனர். இந்த அண்மைய தோல்வி மலேசிய விளையாட்டாளர்களுக்கு நான்காவதாகும். இரண்டாம் இடத்தைப் பிடித்த தாங் ஜீ-யீ வெய் 43, 750 அமெரிக்க டாலரைப் பரிசாகப் பெற்றனர்.








