ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டுக்கான பிக்பாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிட்னி சிக்சர் அணியில் இடம் பிடித்த டாம் கரண் அடுத்த
வரும் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லான்செஸ்டனில் டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் மோதியது இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் 6 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட டாம் கரண் நடுவருடன் மோதலில் ஈடுபட்டார்.