பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.01-
ஜோகூரின் ஜேடிதி எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே மலேசிய எஃப்ஏ கிண்ன கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான் ஜேடிதி, கூச்சிங் சிட்டியை 2-0 என்ற கோல்களில் வீழ்த்தியது.
அவ்வணியின் இரு கோல்களை பெர்க்சண்டா சில்வாவும் ஸிஸ்கோ முனோஸும் புகுத்தினர். அதன் வழி 4-1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் ஜேடிதி இறுதியாட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தது.
இதனிடையே சிலாங்கூர் எஃப்சியை 5-4 என்ற மொத்த கோல் அடிப்படையில் தோற்கடித்து சபா எஃப்சி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது. இறுதியாட்டம் இம்மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறுகிறது.








