தோக்யோ, நவம்பர்.15-
நாட்டின் மகளிர் பிரிவு இரட்டையர்களான பெர்லி டான்-எம்.தீனா ஜப்பானில் நடைபெற்று வரும் குமாமொட்டோ மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதியில் அவர்கள் உபசரணை நாட்டு வீராங்கனைகளான யுகி ஃபுகுஷிமா-மாயூ மட்சுமோதோவுடன் களம் இறங்கினர்.
கடும் சவாலாக இருந்த அவ்வாட்டத்தின் இறுதியில் மலேசிய இணை நேரடி செட்களில் வாகை சூடியது. அவ்வாட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்தது. நாளை இறுதியாட்டத்தில் பெர்லி டான்-எம்.தீனா மற்றொரு ஜப்பானிய ஜோடியைச் சந்திக்கின்றனர். இறுதியாட்டத்தில் காலடி எடுத்து வைத்ததன் மூலம், அவர்கள் இப்பருவத்தின் மூன்றாவது பட்டத்தை வெல்லும் இலக்கில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.








