கோலாலம்பூர், ஜூலை.31-
தேசிய ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் ஜஸ்டின் ஹோ மக்காவ் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக அவர் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தினார்.
உலகத் தரவரிசையில் 45வது இடத்தில் உள்ள ஜஸ்டின், 48 நிமிடங்களில் 21-18, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலகத் தரவரிசையில் 31வது இடத்தில் உள்ள ஆயுஷால் அவருக்கு ஈடு கொடுத்து விளையாட இயலவில்லை.
அந்த இந்திய வீரருடன் ஐந்து முறை மோதியதில் ஜஸ்டினின் மூன்றாவது வெற்றி இதுவாகும். மேலும் இந்தப் பருவத்தில் மே மாதம் தைவான் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் அவர் பெற்ற சிறந்த அடைவு நிலையையும் இது ஈடு செய்கிறது.
நாளை நடைபெறும் காலிறுதியில், 20 வயதான ஜஸ்டின் தாய்லாந்தின் கான்டாஃபோன் வாங்சரோயனை எதிர்கொள்ள உள்ளார்.