இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார்.
டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.
பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.