கோலாலம்பூர், டிசம்பர்.23-
அடுத்தாண்டு நாட்டின் பாரா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தை மேலும் ஆக்ககரப்படுத்த மலேசிய பாராலிம்பிக் மன்றம் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சிடம் இருந்து இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கோரவுள்ளது. இவ்வாண்டு முழுவதும் பாரா விளையாட்டாளர்களின் அடைவு நிலை சிறப்பாக இருந்தது.
அண்மையில் துபாய், ஐக்கிய அரபு சிற்றரசில் நடைபெற்ற ஆசிய இளைஞர் பாராலிம்பிக் போட்டியில் மலேசியா 14 தங்கப் பதக்கங்களை வென்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அக்கோரிக்கை முன் வைக்கப்படவிருப்பதாக எம்பிஎம் தெரிவித்தது.








