ரெட்வூட் சிட்டி, அக்டோபர்.15-
தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி, அமெரிக்கா, ரெட்வூட் சிட்டியில் நடைபெறும் சிலிக்கோன் வெலி பொது ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அவர் எகிப்தின் சல்மா ஹெனியை வீழ்த்தி அவ்வாய்ப்பைப் பெற்றார். அவ்வாட்டத்தில் சிவசங்கரி மிக நிதானத்துடனும் கவனமாகவும் விளையாடினார். வெற்றி பெற அவர் எடுத்துக் கொண்ட நேரம் 22 நிமிடங்கள் மட்டுமே.
இறுதியாட்டத்தில் சிவசங்கரி, அமெரிக்காவின் ஒலிவியா வேவருடன் களம் காண்கிறார். இதற்கு முன் எட்டு ஆட்டங்களில் அவரைச் சந்தித்துள்ள சிவசங்கரி அவற்றில் ஏழில் தோல்வி கண்டுள்ளார். ஆகவே இறுதியாட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.