Oct 16, 2025
Thisaigal NewsYouTube
ஃபிஃபாவின் தடைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மலேசியக் கால்பந்தாட்ட சங்கம் உறுதி!
விளையாட்டு

ஃபிஃபாவின் தடைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மலேசியக் கால்பந்தாட்ட சங்கம் உறுதி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

சர்வதேச கால்பந்தாட்டக் கூட்டமைப்பான ஃபிஃபா விதித்துள்ள தடைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மலேசியக் கால்பந்தாட்டச் சங்கம் அறிவித்துள்ளது.

கால்பந்தாட்ட அமைப்பு மற்றும் தங்களது ஏழு கலப்பு பாரம்பரிய வீரர்களுக்கு எதிரான ஃபிஃபாவின் குற்றச்சாட்டில், இதுவரை எந்த ஓர் ஆதாரமும் காட்டப்படவில்லை என்றும் கால்பந்தாட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதே வேளையில், தங்களது வீரர்கள் போலி ஆவணங்களைப் பெற்றனர் என்றும், தகுதி விதிகளை மீற முயன்றனர் என்றும் ஃபிஃபா குற்றம் சாட்டியுள்ளதற்கு மலேசியக் கால்பந்தாட்டச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்களது மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related News