லண்டன், அக்டோபர்.05-
இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில் செல்சி, பலம் பொருந்திய லிவர்பூலை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. சொந்த அரங்கில் களமிறங்கிய செல்சி, முற்பாதி ஆட்டத்தில் ஒரு கோலைப் போட்டு முன்னணி வகித்தது.
பிற்பாதியில் லிவர்பூல் ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தியது. ஆட்டம் சம நிலையில் முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இறுதித் தருவாயில் செல்சி இரண்டாவது கோலைப் புகுத்தி வெற்றியைத் தன்வசம் ஆக்கியது.