லண்டன், ஆகஸ்ட்.06-
லிவர்பூல் மற்றும் அல்-ஹிலால் இடையே தாக்குதல் ஆட்டக்காரர் டார்வின் நுனேஸின் விற்பனை தொடர்பில் வாய்மொழி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அல்-ஹிலால் அந்த பிரீமியர் லீக் சாம்பியனுக்கு £46 மில்லியன் (RM258 மில்லியன்) சலுகை மற்றும் இலாபகரமான ஊக்கத் தொகைகளை முன் வைத்துள்ளதாக அறியப்படுகிறது. மேலும் அது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது என்று தி அத்லெடிக் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இது நுனேஸ் அந்த சவுதி ப்ரோ லீக் கிளப்புடன் தனிப்பட்ட விதிமுறைகளை ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது.து.
அந்த உருகுவே வீரர் ஒப்புக் கொண்டால், ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெயில் ஸ்போர்ட்டை தொடர்பு கொண்டபோது, லிவர்பூல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
நுனேஸின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் ஆண்டு முழுவதும் பேச்சாக இருந்து வருகிறது. ஜனவரியில் அல்-நாசரின் அழைப்பை லிவர்பூல் நிராகரித்ததும் அவற்றில் அடங்கும்.