சாங்சோவ், ஜூலை.25-
நாட்டின் மகளிர் பிரிவு இரட்டையர்களான பெர்லி டான்-எம். தீனா சீன பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். காலிறுதி ஆட்டத்தில் அவர்கள் ஜப்பான் இணையைத் தோற்கடித்தனர்.
இரு செட்களில் வெறும் 38ட்டே நிமிடங்களில் பெர்லி டானும் எம். தீனாவும் வெற்றி பெற்றனர். இதற்கு முன் ஐந்து முறை அந்த ஜப்பான் ஜோடியிடன் மோதியுள்ள நிலையில், அவ்விருவருக்கும் கிடைத்த நான்காவது வெற்றி அதுவாகும்.
அடுத்து அரையிறுதி ஆட்டத்தில் பெர்லி டான்-எம். தீனா சீன இணையை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.