கோலாலம்பூர், ஆகஸ்ட்07-
2026 ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவில் இந்தியர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பப் போட்டி அகற்றப்பட்டு இருப்பதை ஓர் இன விவகாரமாகப் பார்க்க வேண்டாம் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.
சுக்மா போட்டியில் சிலம்பம் அகற்றப்பட்டு இருப்பது அது இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் முடிவு அல்ல. மாறாக 2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியை ஏற்று நடத்தும் சிலாங்கூர் மாநில அரசின் முடிவாகும் என்று ஹன்னா இயோ தெளிவுபடுத்தினார்.
சுக்மா போட்டியில் உபசரணை மாநிலம் என்ற முறையில் அந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் என்னென்ன விளையாட்டுகளைச் சேர்ந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுக்கு உண்டு என்று ஹன்னா இயோ விளக்கினார்.