Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யா, ஜப்பான் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி
உலகச் செய்திகள்

ரஷ்யா, ஜப்பான் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி

Share:

தோக்யோ, ஜூலை.30-

ரஷ்யா, ஜப்பான் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவாகி உள்ளது. இதையடுத்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், அவாச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சட்கா நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கம்சட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.

இதனால், பிலிப்பைன்ஸ், பாலாவ், மார்ஷல் தீவுகள், குக், கொஸ்ரோ பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பக்கூடும்.

தென் கொரியா, வட கொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்குக் கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை