Oct 12, 2026
Thisaigal NewsYouTube

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய இருவர் கைது

ஶ்ரீநகர், ஏப்ரல்.26-

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்துத் தகர்த்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் ஒவ்வொரு குற்றவாளியும் ஆதரவாளரும், அவர்களின் இருப்பிடத்தில் சென்று வேட்டையாட வேண்டும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →